search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பட்டுக்கோட்டையில் போலீஸ் நிலையத்தில் கைதி மர்மசாவு
    X

    பட்டுக்கோட்டையில் போலீஸ் நிலையத்தில் கைதி மர்மசாவு

    பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கைதி மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அடித்ததால் அவர் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஏனாதி கரம்பை பகுதியை சேர்ந்தவர் ரவிக்காந்தி (37). இவரை கடந்த 26-ந் தேதி திருட்டு வழக்கு தொடர்பாக பேராவூரணி போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு பட்டுக்கோட்டைக்கு கொண்டு வரப்பட்டு போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    இன்று காலை அவர் மர்மமான முறையில் இறந்தார். இதனால் ரவிக்காந்தி உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் போலீசார் அடித்ததால் தான் இறந்ததாக குற்றம் சாட்டினர்.

    கடந்த 2 நாட்களாக அவரை பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து தான் விசாரித்ததாக தெரிவித்தனர்.

    இது குறித்து பட்டுக்கோட்டை போலீசார் கூறும் போது, குற்றவாளி ரவிக்காந்தி பேராவூரணி போலீஸ் நிலையத்திலிருந்து மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார்.

    இரவு நேரமாகி விட்டதால் மாஜிஸ்திரேட்டிடம் காலை ஆஜர்படுத்தலாம் என பட்டுக்கோட்டை அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டார்.

    நேற்று இரவு அவருக்கு உணவு வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்டார். இந்த நிலையில் தான் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார் என கூறினர்.

    போலீஸ் நிலையத்தில் கைதி இறந்த சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×