என் மலர்

  செய்திகள்

  ராதாபுரம் அருகே அனுமதியின்றி கபடி போட்டி: 7 பேர் மீது வழக்கு
  X

  ராதாபுரம் அருகே அனுமதியின்றி கபடி போட்டி: 7 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராதாபுரம் அருகே அனுமதியின்றி கபடி போட்டி நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  வள்ளியூர்:

  நெல்லையை அடுத்த ராதாபுரம் அருகே உள்ள கும்பலம்பாடு கிராமத்தில் அனுமதியின்றி கபடி போட்டிகள் நடப்பதாக ராதாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  அப்போது அங்கு அனுமதியின்றி கபடி போட்டிகள் நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கபடி போட்டிகள் அனுமதி பெற்று தான் நடத்த வேண்டும் என கூறி போட்டியை போலீசார் தடுத்தனர். அப்போது பணி செய்ய விடாமல் தடுத்ததாக அதேபகுதியை சேர்ந்த குமார், மகேஷ், இசக்கி, மணி, கண்ணன், புவனேஷ், முத்து ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×