search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில், நாளை 9 மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வு: 3,776 பேர் எழுதுகிறார்கள்
    X

    புதுவையில், நாளை 9 மையங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வு: 3,776 பேர் எழுதுகிறார்கள்

    மத்திய நிர்வாக பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுகளை புதுவையில் 9 மையங்களில் நடத்துகிறது. இத்தேர்வை 3 ஆயிரத்து 776 பேர் தேர்வுகளை எழுதுகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிர்வாக பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வுகளை புதுவையில் 9 மையங்களில் நடத்துகிறது. தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9-30 மணிமுதல் 11-30 மணி வரையிலும், பிற்பகல் 2-30 மணிமுதல் 4-30 மணி வரையிலும் நடக்கிறது.

    புதுவையில் செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளி, பாக்குமுடையான்பட்டு இதயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, லாஸ்பேட்டை பெண்கள் பாலிடெக்னிக், வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தாகூர் கலைக்கல்லூரி, கோரிமேடு மதர் தெரசா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றில் 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த மையங்களில் 3 ஆயிரத்து 776 பேர் தேர்வுகளை எழுதுகிறார்கள். தேர்வுக்கான ஏற்பாடுகளை புதுவை அரசு நிர்வாகம் செய்துள்ளது. இதற்காக தேர்வு மையங்களுக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிமுதல் 9 மணி வரையிலும், தேர்வு முடிந்த பின் தேர்வு மையங்களில் இருந்து மாலை 4-30 மணிக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    Next Story
    ×