search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசைத்தறிகள் வேலை நிறுத்தம்: ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிப்பு
    X

    விசைத்தறிகள் வேலை நிறுத்தம்: ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிப்பு

    பல்லடம் பகுதியில் விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தினால் ரூ.1 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.தினசரி ரூ.1 கோடி மதிப்பிலான 3 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களாக கடுமையான நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தி தொழில் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி ஒரு மீட்டருக்கு ரூ.3 நஷ்டம் ஏற்படுகிறது.இதே நிலையில் துணி உற்பத்தி செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.1கோடி நஷ்டம் ஏற்படுகிறது. துணி உற்பத்தியால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில் நேற்று (5-ந் தேதி) முதல் 11 -ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு 50ஆயிரம் விசைத்தறிகளை இயக்குவது இல்லை என்றும் நூல் விலை சீராகவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்று பல்லடம் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் சொந்த விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி பல்லடம் பகுதியில் நேற்று 50ஆயிரம் விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடி மதிப்புள்ள துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    இது குறித்து பல்லடம் பகுதி சொந்த விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஜல்லிபட்டி ராமசாமி கூறியதாவது:-

    நூலுக்கு அரசு விதித்துள்ள 5சதம் வரியை ஒரு சதவீதமாக குறைத்து விதிக்க வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள பஞ்சு விலை ஏற்றத்தால் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. பஞ்சு,நூல் பதுக்கலை மத்திய,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

    செயற்கையாக உருவாக்கப்பட்ட நூல் விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது பல்லடம் பகுதியில் 5ஆயிரம் விசைத்தறிகளில் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த ஒரு வார காலத்திற்குள் நூல் விலை சீராகவில்லை என்றால் 11-ந் தேதிக்கு பிறகு கோவை,திருப்பூர் மாவட்ட அனைத்து விசைத்தறி துணி உற்பத்தியாளர்களையும் திரட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×