என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே அரசு அதிகாரி எரித்து கொலை: முக்கிய குற்றவாளி இக்ரமுல்லா ஆத்தூர் கோர்ட்டில் சரண்
Byமாலை மலர்26 July 2016 10:08 AM GMT (Updated: 26 July 2016 10:08 AM GMT)
சேலம் அருகே அரசு அதிகாரி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான இக்ரமுல்லா ஆத்தூர் கோர்ட்டில் இன்று சரணடைந்தார்.
ஓசூர்:
ஓசூர் நகராட்சியில் சர்வேயராக பணிபுரிந்தவர் குவளை செழியன் (வயது 42). கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி பணம் பறிக்கும் நோக்கத்தில் காருடன் இவரை கடத்திய கும்பல் கொலை செய்து சேலத்தை அடுத்த தீ வட்டிப்பட்டி பகுதியில் காருடன் எரித்து விட்டு தப்பியது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய ஓசூர் மற்றும் தீவட்டிப்பட்டி போலீசார் குவளை செழியனின் கள்ளக்காதலி கார்த்திக்கேயனி, கலைவாணன், சக்திவேல் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 6 பேர் என 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கார்த்திகேயனியின் முன்னாள் காதலரான சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த இக்ரமுல்லா தொடர்ந்து தலைமறைவாக இருந்தார்.
அவரை டி.ஐ.ஜி. நாகராஜன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.இதற்கிடையே வாட்ஸ் அப்பில் பேசி சரண் அடைய போவதாகவும் அறிவித்தார். ஆனால் போலீசில் சரண் அடையவில்லை.
இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சல்லடை போட்டு தேடிய போது டெல்லியில் இக்ரமுல்லா பதுங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும் தனிப்படை போலீசார் அவருக்கு நெருக்கடி கொடுத்ததால் உயிருக்கு பயந்து போன இக்ரமுல்லா சேலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஆத்தூர் ஜே.எம்.1 கோர்ட்டில் நீதிபதி ரவிச்சந்திரன் முன்னிலையில் இக்ரமுல்லா சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோர்ட்டில் சரண் அடைந்த இக்ரமுல்லாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளார்.
போலீஸ் காவலில் எடுத்து இக்ரமுல்லாவை விசாரித்தால் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இந்த வழக்கு தற்போது மேலும் சூடுபிடித்துள்ளது.

Next Story
×