search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அன்னதானப்பட்டியில் கணவரின் கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த இளம்பெண் கைது
    X

    சேலம் அன்னதானப்பட்டியில் கணவரின் கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த இளம்பெண் கைது

    சேலத்தில் கணவரின் கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் அன்னதானப்பட்டி பாண்டுநகர் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜோதிகவுதமன் (வயது 34). சீரியல் செட் போடும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி துர்கா தேவி (30). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜோதி கவுதமனுக்கும், அதே பகுதியில் கணவரை பிரிந்து பெண் குழந்தையுடன் தனியாக வாழும் திலகா (28) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    இதனால் ஜோதிகவுதமன் அடிக்கடி திலகா வீட்டுக்கு சென்று வந்தார். இதை அறிந்த துர்காதேவி இருவரையும் கண்டித்தார். இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திலகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையறிந்த துர்கா தேவி மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் துர்கா தேவி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் வீட்டில் இருந்த குழந்தைகளை அடிக்கடி வந்து பார்த்து சென்றார்.

    இந்த நிலையில் துர்காதேவி நேற்று திலகாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது ஜோதிகவுதமனும் அங்கு இருந்தார். இதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்த துர்காதேவி 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து ஜோதிகவுதமன் வெளியில் சென்றுவிட்டார்.

    வீட்டில் திலகா தனியாக இருப்பதை அறிந்த துர்கா தேவி ஆவேசத்துடன் வீட்டுக்குள் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த துர்காதேவி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திலகாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு பாய்ந்தது.

    இதனால் வலி தாங்க முடியாமல் திலகா அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் துர்காதேவி தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ், தலைமை காவலர் தேவி உள்பட பலர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அங்கு உயிருக்கு போராடியபடி கிடந்த திலகாவை மீட்டு கொண்டலாம்பட்டி பைபாசில் உள்ள ஒரு தனியாஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து தலைமறைவான துர்காதேவியை போலீசார் தீவிரமாக தேடினர்.அப்போது களரம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த துர்கா தேவியை போலீசார் கைது செய்தனர்.

    கணவரின் கள்ளக்காதலியின் கழுத்தை மனைவியே அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×