search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட ஜெகன்பாபு
    X
    கொலை செய்யப்பட்ட ஜெகன்பாபு

    சுவாதி கொலையாளி ராம்குமாரை போல ஜெகன்பாபுவை கொன்றுவிட்டு போலீசார் நடவடிக்கையை கண்காணித்த கொலையாளி

    காதலி அஜிதாவுக்காக அவரது கணவர் ஜெகன் பாபுவை கொலை செய்த ஜான்பிரின்சின் நடவடிக்கை சுவாதி கொலையாளி ராம்குமார் நடவடிக்கை போல இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
    திருச்சி:

    காதலி அஜிதாவுக்காக அவரது கணவர் ஜெகன் பாபுவை கொலை செய்த ஜான்பிரின்சின் நடவடிக்கை சுவாதி கொலையாளி ராம்குமார் நடவடிக்கை போல இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஜெகன்பாபுவை கொலை செய்ய முடிவெடுத்த ஜான்பிரின்ஸ் அதற்காக தேர்வு செய்த இடம் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் ஆகும். ஜூலை 7ம் தேதி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஜெகன்பாபுவுடன வந்த ஜான்பிரின்ஸ் திருச்சியிலிருந்து கார்மூலம் சென்னை செல்லலாம் எனக்கூறி இறங்கியுள்ளார்.

    அன்றிரவு 12.45 மணிக்கு ரெயிலை விட்டு இறங்கிய ஜான்பிரின்ஸ் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறி ஜங்சன் ரெயில்வே பாலம் அருகில் இருட்டான பகுதிக்கு ஜெகன்பாபுவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திடீரென ஜெகன்பாபு கழுத்தை கர்சீப்பால் இறுக்கி கொன்று விட்டு உடலை தண்டவாளத்தில் கிடத்தியுள்ளார். இரவு 1.30 மணிக்கு சென்னையிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் டிரைவர் அந்தோணி சாமி ஜெகன்பாபுவின் உடலைப் பார்த்ததால் ரெயிலை நிறுத்தி விட்டார்.

    ஜெகன்பாபு உடலில் ரெயில் ஏறி உடல் துண்டு துண்டாகி விடும். அவர் தவறி விழுந்தோ, தற்கொலை செய்தோ இறந்திருக்கலாம் என போலீசார் முடிவு செய்து வழக்கை முடித்து விடுவார்கள் என்று நினைத்த ஜான்பிரின்ஸ்க்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மறுநாள் செய்தி தாள்களில் ஜெகன்பாபு உடல் மீட்கப்பட்ட தகவலை தெரிந்த பிறகு சென்னைக்கு அவசரம் அவசரமாக சென்று விட்டார்.

    அங்கு எதுவும் நடக்காது போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்குச் சென்றார். ஆனாலும் தினசரி வழக்கின் போக்கை தெரிந்து கொண்டே இருந்தார். சம்பவம் நடந்த சில நாட்களில் வாட்ஸ்-அப்பில் ஜெகன்பாபு உடல் தண்டவாளத்தின் குறுக்காக கிடந்த படம் பரவியதை பார்த்த, அவரது பெற்றோர் திருச்சி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அஜிதாவை அழைத்து சென்று ஜெகன்பாபு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என புகார் கொடுத்ததை அஜிதா மூலம் தெரிந்து கொண்டார்.

    அதன் பிறகு அஜிதாவிடம் போலீசார் இனி உன்னை கண்காணிப்பார்கள். எனவே செல்போனில் இனி என்னுடன் சிறிது நாட்கள் தொடர்பு கொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

    கொலை நடந்த 7ம் தேதியிலிருந்து கடந்த 20ம் தேதி வரை 14 நாட்கள் ஜான்பிரின்ஸ் போலீஸ் நடவடிக்கையை கண்காணித்தபடி இருந்துள்ளார். ஜெகன்பாபுவை கொலை செய்ய திட்டமிட்ட ஜான்பிரின்ஸ் சென்னையில் தனது பக்கத்து அறையில் வசித்த வெங்கட்ராமன் என்பவரது சிம்கார்டை திருடி தனது செல்போனில் டூயல் சிம் கார்டு வசதி இருந்ததால் அதில் போட்டு ஜெகன்பாபுவிடம் பேசியுள்ளார்.

    கடைசியில் ஒருமுறை தெரியாமல் தனது நம்பரிலேயே ஜெகன்பாபுவை தொடர்பு கொண்டதால் போலீசில் ஜான்பிரின்ஸ் சிக்கிக் கொண்டார்.

    சென்னையில் ஜான் ப்ரின்ஸ் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போலீசார் ஜெகன்பாபுவை கொலை செய்த போது திருடிய 10 பவுன் நகை, பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். ஒரே ஆஸ்பத்திரியில் அஜிதாவுடன் பணியாற்றிய ஜான்பிரின்ஸ் 2 வருடமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரது காதல் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. கொலை வழக்கில் அஜிதாவும், ஜான்பிரின்சும் சிக்கியது ஆஸ்பத்திரி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×