என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
பெரியாறு நீர்ப்பிடிப்பில் புதிய அணை: கேரள முதல்வரை கண்டித்து தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்
கம்பம், ஜூன்.23–
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் வாழ்வாதாரமாக திகழும் முல்லைபெரியாறு அணை பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அணையில் தற்போது 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது.
அணை பலமாக உள்ளது என ஆய்வுக்குழு தெரிவித்ததையடுத்து நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கேரள அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் புதிய அணை கட்டப்போவதாக அறிவித்துள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளிலும் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்கு தமிழகஅரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கம்பத்தில் நடைபெற்றது. விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புகுழு தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துணை செயலாளர் செங்குட்டுவன், 5 மாவட்ட விவசாய சங்க தலைவர் அப்பாஸ், மதுரை புத்திசிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கேரள அரசு முல்லைபெரியாற்றில் புதிய அணை கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக உள்ளதோடு தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனை வண்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அணை பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும்.
அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கும், பராமரிப்பு செய்வதற்கும் தேவையான பொறியாளர்களை நியமித்து, நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு பின்னர் குழுதலைவர் பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், முல்லைபெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டப்போவதாக தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோரை கண்டித்து கூடலூரில் அடுத்த மாதம் 19–ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இதற்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரை சந்தித்து விவாதிக்க உள்ளோம்.
மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளையும், பொதுமக்களையும் திரட்ட மதுரை தலைமை தபால் நிலையத்திற்கு முன் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்