என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் சரிவு
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12–ந் தேதி குறுவை சாகுபடி செய்ய காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம் .
ஆனால் அணையில் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12–ந் தேதிக்கு முன்னதாகவோ, அல்லது கால தாமதமாகவோ? தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாகவே போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததால் ஜூன் மாதம் 12–ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது இல்லை.
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடியும் வரை தென் மேற்கு பருவ மழை காலமாகும். கேரளா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த மழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த மழை தமிழகத்திற்கு வழக்கமாக அதிக அளவில் கை கொடுப்பதில்லை. ஆனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிக அளவில் பெய்யும். இதனால் மேட்டூர் அணையில் நீர் பிடிப்பு பகுதிகளான கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்ப வாய்ப்புள்ளது.
பின்னர் அந்த அணைகளில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் திறந்து விடப்படும் தண்ணீரால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வரத்து கிடைக்கிறது.
தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளிலும் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை.
எனவே தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவில் அதிக அளவில் மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆகவே ஜூன் 12–ந் தேதிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மேட்டூர் அணை நீர் மட்டம் 44.69 அடியாக இருப்பதாலும், நீர் வரத்து 54 கன அடியாகவும் உள்ளதாலும் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் நிலத்தடி நீரை பயன்படுத்தி 1.5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்ய டெல்டா விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். மேலும் குறுவை சாகுபடியின் இறுதி கட்டத்திற்காவது தென் மேற்கு பருவமழை கை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் தற்போது டெல்டா விவசாயிகள் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்