என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சூறாவளி காற்றுக்கு விழுந்த மரங்கள்: கொடைக்கானல்-பழனி போக்குவரத்து பாதிப்பு
Byமாலை மலர்6 Jun 2016 4:58 AM GMT (Updated: 6 Jun 2016 4:58 AM GMT)
கொடைக்கானலில் நேற்று இரவு வீசிய சூறாவளி காற்றால் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. அந்த சமயத்தில் பலத்த சூறைக்காற்றும் வீசுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுகின்றன.
மேல்மலையில் உள்ள மன்னவனூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் காற்றுடன் பெய்த மழையினால் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் வயர்கள் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின் துண்டிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று மிதமான சாரல் மழையுடன் பலத்த காற்று வீசியது. நள்ளிரவு சமயத்தில் வீசிய சூறைக்காற்றால் பழனி சாலையில் உள்ள மேல்பள்ளம் என்ற இடத்தில் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் நெருக்கடி ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் போலீசார் மற்றும் வனத்துறை ஊழியர்களை உடனடியாக அழைக்க முடியவில்லை. இதனால் வாகனங்களில் வந்த பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் சேர்ந்து சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
மரக்கிளைகள் பட்டு அவ்வழியே செல்லும் மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் மின் துண்டிப்பும் ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்களும், வனத்துறையினரும் இன்று காலை அப்பகுதிக்கு சென்று சீரமைத்தனர்.

Next Story
×