என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் பலி: குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் குறைபாடு என புகார்
Byமாலை மலர்28 May 2016 10:51 PM IST (Updated: 28 May 2016 11:51 PM IST)
அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண், திடீரென இறந்தார் என உறவினர்கள் புகார் கூறினர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள வக்கனாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசிங்கன். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது25).
நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 25–ந்தேதி பிரசவத்திற்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த பொன்னம்மாள் நேற்று திடீரென இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், சிகிச்சையில் குறைபாடு காரணமாக பொன்னம்மாள் இறந்ததாக புகார் கூறினர்.
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×