நாளை அரசியல் முடிவு எடுக்க போகிறோம்- பாமக அறிவிப்பு

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் விஷயத்தில் நாளை அரசியல் முடிவு எடுக்க உள்ளதாக பாமக அறிவித்துள்ளது.
சென்னையில் விவசாயிகள்- தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் கைது

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி சென்னையில் விவசாயிகள்-தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட சென்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
ஜலதோஷத்துக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை திடீர் மரணம்

ஜலதோஷத்துக்கு ஊசி போட்ட புதுமாப்பிள்ளை திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று

திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்கள், 20 பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கு உடனடியாக பரிசோதனையை மருத்துவப் பணியாளர்கள் மேற்கொண்டனர்.
தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன் - ராகுல்காந்தி

தமிழகத்தை மீண்டும் கட்டமைக்க உதவ விரும்புகிறேன், உலகமே தமிழகத்தை உற்றுநோக்க வேண்டும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால்கூலித்தொழிலாளி தற்கொலை

மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நெல்லூர் வாலிபர் லாரி மோதி பலி

மோட்டார் சைக்கிளில் வந்த நெல்லூர் வாலிபர் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலி

தஞ்சையில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர் கதறல்- ‘இனி எப்படி வாழ்வோம்’ என உருக்கம்

இலங்கை கடற்படை தாக்குதலில் கொல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்களின் குடும்பத்தினர், கடல் தொழிலை தவிர்த்து வேறு தொழில்கள் தெரியாது. இனி எப்படி வாழ்வோம் என்று தெரியவில்லை என தெரிவித்தனர்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆளில்லா விமானம் மூலம் அகழ்வாராய்ச்சிக்கான பணி தொடங்கியது

கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் அகழ்வாராய்ச்சிக்கான பணி தொடங்கியது.
சென்னை வெளிவட்டச் சாலை 2-ம் பகுதியை உடனே திறக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் பகுதியை உடனடியாக திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பனியனை மாற்றி காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றது அம்பலம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டம் செய்துள்ளது கோட்டாசியர் விசாரணை தெரியவந்துள்ளது.
கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி 3 மாதங்களில் நிறைவடையும்

கூடங்குளம் 2-வது அணி உலையில் பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணியையும் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் மாற்றும் பணி தொடங்கியது.
ராகுல்காந்திக்கு கரூரில் தயாராகும் பாரம்பரிய மண்பானை சமையல்

கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுவதாக மண்பானை உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.
கோவில்பட்டியில் கணவனை வெட்டிக்கொன்ற பெண்

கோவில்பட்டியில் 2-வது திருமணத்திற்கு முயன்ற கணவனை மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி

தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளை- 6 பேர் கைது

ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவத்தில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு

இலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்டது.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல் அதிமுகவை விமர்சிப்பதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்கள் நடத்துகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.