

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் 2-வது முறையாக மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் சுவாயோ, மிர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
சுவாயோ 26 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 63 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 94 ரன்கள் குவித்தார். முசகண்டா 22 பந்தில் 33 ரன்கள் அடிக்க ஜிம்பாப்வே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் பகர் சமான் 38 பந்தில் 47 ரன்கள் அடித்து நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.