என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சச்சினின் வாழ்நாள் சாதனையை முறியடித்த விராட் கோலி
- இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.
- இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. சச்சின் 19 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ள நிலையில், கோலி 20 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.
இந்த பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் 17 முறை தொடர் நாயகன் விருதை வென்று 3 ஆம் இடத்தில உள்ளார்.






