search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஜோகோவிச்
    X
    ஜோகோவிச்

    அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஜோகோவிச் விலகல்

    கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்து வரும் ஜோகோவிச் கொரோனா விதிமுறைகள் காரணமாக அமெரிக்க டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
    பெல்கிரேடு:

    அமெரிக்காவில் பிரபலமான இண்டியன்வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. மியாமி ஓபன் டென்னிஸ் 23-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் பட்டியலில் உலகின் 2-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) பெயர் இடம் பெற்றிருந்தது. 

    ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடர்ந்து மறுத்து வரும் அவர் அங்கு கடைபிடிக்கப்படும் கொரோனா விதிமுறைகள் காரணமாக அமெரிக்காவுக்கு செல்ல இயலாது என்பதால் இவ்விரு போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 

    அமெரிக்கர் அல்லாத மற்ற நாட்டினர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்கனவே இதே பிரச்சினையால் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள சென்ற ஜோகோவிச் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம்.

    Next Story
    ×