search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சாய்னா நேவால்
    X
    சாய்னா நேவால்

    இந்தியா ஓபன் பேட்மிண்டன்- சாய்னா, பிரனோய், லக்சயா சென் முன்னேற்றம்

    சாய்னாவை எதிர்த்து விளையாடிய செக் குடியரசு வீராங்கனை முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
    புதுடெல்லி:

    இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் இந்தியாவின் சாய்னா நேவால், லக்சயா சென் மற்றும் பிரனோய் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினர். 

    முன்னாள் நம்பர்-1 வீராங்கனையான சாய்னா, கடந்த இரண்டு ஆண்டுகளாக காயம் காரணமாக ஏராளமான போட்டிகளில் விளையாட முடியாமல் இருந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்டு பழைய உற்சாகத்துடன் களமிறங்கிய சாய்னா, இந்தியா ஓபன் முதல் சுற்று ஆட்டத்தில் செக்  குடியரசின் தெரேசா ஸ்வாபிகோவாவை எதிர்கொண்டார். 

    இப்போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக செக் குடியரசு வீராங்கனை பாதியில் வெளியேறினார். இதனால் சாய்னா நேவால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சாய்னா 2ம் சுற்றுக்கு முன்னேறினார். சாய்னா இனி இரண்டாவது சுற்றில் மற்றொரு இந்திய வீராங்கனை மால்விகாவை எதிர்கொள்கிறார்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரனோய், ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை 21-14, 21-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2ம் சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் மிதுன் மஞ்சுநாத்துடன் மோத உள்ளார்.

    லக்சயா சென் எகிப்தின் ஆதம் ஹாதமை 21-15, 21-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். 2வது சுற்றில் லக்சயா சென்  ஸ்வீடன் நாட்டின் பெலிக்சை சந்திக்க உள்ளார்.
    Next Story
    ×