search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஷர்துல் தாகூர்
    X
    ஷர்துல் தாகூர்

    தெறிக்கவிட்ட ஷர்துல் தாகூர்: 4.5 ஓவரில் 8 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்தார்

    ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் எல்கர், பீட்டர்சன், வான் டெர் டஸ்சன் ஆகியோரை மிகவும் விரைவாக வீழ்த்தி ஷர்துல் தாகூர் அசத்தினார்.
    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    கே.எல். ராகுல் 50 ரன்களும், அஸ்வின் 46 ரன்களும் சேர்க்க இந்தியா 202 ரன்னில் சுருண்டது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கோ ஜான்சன் 4 விக்கெட்டும், ரபாடா மற்றும் ஆலிவர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் தென்ஆப்பிரிக்கா 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 11 ரன்களும், கீகன் பீட்டர்சன் 14 ரன்களும் எடுத்திருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தொடர்ந்து பந்து வீசினார்கள். ஆனால் அவர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. 14 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த தென்ஆப்பிரிக்கா அதன்பின் விக்கெட்டை இழக்காமல் இருந்தது.

    ஷர்துல் தாகூர்

    39-வது ஓவரை ஷர்துல் தாகூல் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டீன் எல்கரை 28 ரன்னில் வீழ்த்தினார். அப்போது தென்ஆப்பிரிக்கா 88 ரன்கள் எடுத்திருந்தது. 43-வது ஓவரின் கடைசி பந்தில் அரைசதம் அடித்திருந்த கீகன் பீட்டர்சனை 62 ரன்னில் சாய்த்தார். இந்த ஸ்பெல்லில் ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் அனல் பறந்தது. 45-வது ஓவரின் 4-வது பந்தில் வான் டெர் ரஸ்சனை 1 ரன்னில் வீழ்த்தினார்.

    குறிப்பிட்ட நேரத்தில் 4.5 ஓவர்களில் 8 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை சாய்த்தார். இதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும். 88 ரன்னில் இருந்து 102 ரன்னுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தற்போது தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    Next Story
    ×