search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிம் பெய்ன்
    X
    டிம் பெய்ன்

    கேப்டன் பதவியில் இருந்து விலகினார் டிம் பெய்ன் - பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பியது அம்பலம்

    பாலியல் முறைகேடு சம்பவத்தினால் தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா:

    2017 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய காரணத்திற்காக அப்போதைய ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் பதவி பறிக்கப்பட்டு டிம் பெயினிடம் வழங்கப்பட்டது. அப்போது இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக டிம் பெயின் செயல்பட்டு வருகிறார்.

    இந்த நிலையில் மீண்டும்  ஒரு முறை ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் புகாரில் சிக்கி தனது கேப்டன் பதவியை  ராஜினாமா செய்துள்ளார். 

    சக பெண் ஊழியருக்கு தவறான குறுஞ்செய்திகளை அனுப்பியதாக டிம் பெயின் மீது பாலியல் புகார் எழுந்தது. இந்த நிலையில் இன்று காலை தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக  டிம் பெயின் அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் டிம் பெயின் இந்த முடிவை அறிவித்துள்ளார்.

    இது குறித்து டிம் பெயின் கூறியதாவது :

    ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் அப்போதைய பெண் சக ஊழியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தேன். இந்த தனிப்பட்ட உரைப் பரிமாற்றம் பொது வெளியில்  வரப் போகிறது என்பதை நான் சமீபத்தில் அறிந்தேன்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பதற்கான தரத்தை 2017 ஆம் ஆண்டு நான் செய்த அந்த செயல்கள் பாதிக்கின்றன.

    எனது மனைவிக்கும், எனது குடும்பத்தினருக்கும், மற்ற தரப்பினருக்கும் நான் ஏற்படுத்திய காயம் மற்றும் வலிக்காக ஆழ்ந்த வருந்துகிறேன். ஏதேனும் சேதம் ஏற்பட்டால் வருந்துகிறேன். இது எங்கள் விளையாட்டின் நற்பெயரைக் கெடுக்கும். மேலும் நான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது சரியான முடிவு என்று நான் நம்புகிறேன்.

    ஆஷஸ் தொடருக்கு முன்னால் அணிக்கு விரும்பத்தகாத இடையூறாக மாறுவதை நான் விரும்பவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எனது பங்கை நான் விரும்பி செய்துள்ளேன். ஆஸ்திரேலிய  டெஸ்ட் அணியை வழிநடத்தியது எனது விளையாட்டு வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்.

    எனது அணியினரின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நாங்கள் ஒன்றாகச் சாதித்ததில் பெருமைப்படுகிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உறுதியான உறுப்பினராக எப்போதும்  நான் இருப்பேன். அடுத்து வரும் ஆஷஸ் சுற்றுப்பயணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் .

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×