search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை பவுண்டரிக்கு விளாசும் ஸ்மித்
    X
    பந்தை பவுண்டரிக்கு விளாசும் ஸ்மித்

    டி20 உலகக் கோப்பை- முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா

    முன்வரிசை வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கை எட்டுவதில் நெருக்கடி ஏற்பட்டது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்கியது.  அபுதாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா மோதின. 

    முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, துவக்கம் முதலே ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்கள வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். எனவே, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு118 ரன்கள் எடுத்தது.  

    இதையடுத்து 119 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் கடும் சவால் அளித்தனர். துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் வார்னர் 14 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மிட்செல் மார்ஷ் 11 ரன்களில் நடையை கட்டினார். 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், சற்று நிதானமாக ஆடிய ஸ்மித் 35 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். மேக்ஸ்வெல் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  அப்போது அணியின் ஸ்கோர் 81.

    முன்வரிசை வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்கை எட்டுவதில் நெருக்கடி ஏற்பட்டது. எனினும், மார்கஸ் ஸ்டோய்னிஸ்- மேத்யூ வேட் ஆகியோர் கவனமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.  

    கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் பரபரப்பானது. அந்த ஓவரை எதிர்கொண்ட ஸ்டோய்னிஸ், முதல் பந்தில் 2 ரன், இரண்டாவது மற்றும் நான்காவது பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
    Next Story
    ×