search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏபி டி வில்லியர்ஸ், புவனேஷ்வர் குமார்
    X
    ஏபி டி வில்லியர்ஸ், புவனேஷ்வர் குமார்

    பதற்றமாக இல்லை என்று சொன்னால், அது பொய்யாக இருக்கும்: ஏபி டி-க்கு எதிரான கடைசி ஓவர் குறித்து புவி சொல்கிறார்

    அதிரடி மன்னனா? டெத்த ஓவர் ஸ்பெஷலிஸ்டா? என்ற கடுமையான போட்டியில் புவனேஷ்வர் குமார் டி வில்லியர்ஸை கட்டுப்படுத்தினார்.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்.சி.பி. 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது பேட்டிங் செய்தது. அந்த அணிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

    புவி கடைசி ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் புவி ஒரு ரன் கொடுத்தார். கடைசி நான்கு பந்தில் 12 ரன்கள் தேவை. டி வில்லியர்ஸ் பந்தை சந்தித்தார். புவி பந்து வீசினார். டி வில்லியர்ஸ் சிறந்த அதிரடி வீரர். எந்தவொரு இக்கட்டான நிலையிலும் பந்தை சிக்சருக்கு அனுப்பக் கூடியவர்.

    அதேவேளையில் புவனேஷ்வர் குமார் உலகளவில் டி20 போட்டியில் சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளராக உள்ளார். இதனால் யார் இந்த போட்டியில் வெற்றி பெறுவார்கள் எனற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    3-வது பந்தில் ஏபி டி வில்லியர்ஸ் ரன்ஏதும் எடுக்கவில்லை. ஆனால், 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதுவும் 88 மீட்டர் தூர சிக்ஸ்.  புல் டெலிவரியாக ஸ்லாட்டில் விழுந்த பந்தை எளிதாக விளாசினார் டி வில்லியர்ஸ்.

    கடைசி இரண்டு பந்தில் 6 ரன்கள் அடித்தால் வெற்றி. எப்படியும் டி வில்லியர்ஸ்தான் ஜெயிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஃப் ஸ்டம்பிற்கு மிகவும் வெளியே வீசப்பட்ட புல் டாஸ் பந்தை அடிக்க தவறினார் ஏபி டி வில்லியர்ஸ். இந்த முறை புவனேஷ்வர் குமார் ஆதிக்கம் செலுத்தினார்.

    கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஏபி டி வில்லியர்ஸ் பந்தை எதிர்கொண்டார். இந்த முறையும் பந்தை புல் டாஸாக வீசினார். ஏபி டி வில்லியர்ஸ் ஒரு ரன் மட்டுமே அடிக்க ஆர்.சி.பி. தோல்வியை சந்தித்தது.

    மிகப்பெரிய இரண்டு வீரர்கள் மோதியதில் புவனேஷ்வர் குமார் வெற்றி பெற்றார். டி வில்லியர்ஸை எதிர்த்து பந்து வீசும்போது நான் பதற்றமாக இல்லை என்றால், அது பொய்யாகத்தான் இருக்கும் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

    புவி

    இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நான் பதற்றமாக இல்லை என்றால், நான் பொய் சொல்கிறேன் என்று அர்த்தம். புல் டெலிவரி  பந்திற்கு முயற்சி செய்தேன். மற்றவை குறித்து ஏதும் யோசிக்கவில்லை. ஏபி டி வில்லியர்ஸ் சிக்சர் விளாசியதால், ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வைடு யார்க்கர் பந்து வீசினேன். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம் என நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொருவரும் அபாரமாக பந்து வீசினார்கள்’’ என்றார்.

    Next Story
    ×