search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி கேப்பிடல்ஸ்
    X
    டெல்லி கேப்பிடல்ஸ்

    ஐ.பி.எல். 2021 - புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி கேப்பிடல்ஸ்

    துபாயில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியிடம் தோற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
    துபாய்:

    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2-வது பாதி ஆட்டங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. 

    டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 13 போட்டிகளில் விளையாடியுள்ளன. மற்ற 4 அணிகளும் தலா 12 போட்டிகளில் விளையாடியுள்ளன.

    இதில் டெல்லி கேப்பிடல்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்று 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றில் நுழைந்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 9-ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
     
    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 6 வெற்றிகளுடன் 4-வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 5 வெற்றிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் 5 வெற்றிகளுடன் 6-வது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 7-வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

    இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகமிக முக்கியமானது. இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும்.

    Next Story
    ×