search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎல் ராகுல் - மார்கன்
    X
    கேஎல் ராகுல் - மார்கன்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் பந்து வீச்சு தேர்வு

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியில் தமிழக வீரர் ஷாஜகானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் தொடங்கும் 45-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    இந்நிலையில் இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள்:-

    1. வெங்கடேஷ் அய்யர் 2. சுப்மன் கில் 3. நிதிஷ் ரானா 4. திரிபாதி 5. இயன் மார்கன் 6. வருண் சக்கரவர்த்தி 7. தினேஷ் கார்த்திக் 8. சுனில் நரேன் 9. சிவம் மாவி 10. டிம்சய்பர்ட் 11. டிம் சவுத்தி

    பஞ்சாப் அணி வீரர்கள்:

    1. கேஎல் ராகுல் 2. மயங்க் அகர்வால் 3. மார்க்ராம் 4. பூரான் 5. ஹூடா 6. ஆலன் 7. ஷாஜகான் 8. முகமது சமி 9. எல்லீஸ் 10. பிஷ்னோய் 11. ஹர்ஷ்திப் சிங்


    Next Story
    ×