search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    2022-ல் மேலும் இரண்டு புதிய அணிகள்: டெண்டர் வெளியிட்டது பி.சி.சி.ஐ.

    ஐ.பி.எல். போட்டியில் இடம்பெற இருக்கும் மேலும் இரண்டு அணிகளை வாங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. டெண்டர் வெளியிட்டுள்ளது.
    ஐ.பி.எல். 20 கிரிக்கெட்டில் மொத்தம் 8 அணிகள் இடம்பிடித்து விளையாடி வருகின்றன. ஒரு வருடம் மட்டும் 10 அணிகள் இடம் பெற்றன. 10 அணிகள் விளையாடும்போது நாட்கள் அதிகரிக்கப்பட்டதாலும், அணிகள் வாங்கப்பட்டது தொடர்பாக புகார் எழுப்பப்பட்டதாலும் புதிதாக சேர்க்கப்பட்ட இரண்டு அணிகள் நீக்கப்பட்டன.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது சீசனில்  கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட இருப்பதாக பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதையடுத்து, 2022-ம் ஆண்டு ஐ.பி.எல்., இரண்டு புதிய அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் கொண்ட தொடராக இருக்கும். 

    இந்த இரண்டு அணிகளையும் குறித்த மற்ற எந்த தகவலும் வெளிவரவில்லை. இந்த இரண்டு புதிய அணிகளை வாங்குவதற்கு பிரபல தொழிலதிபர்களிடையே கடும் போட்டிகள் இருப்பதாகவும், இதற்காக பி.சி.சி.ஐ.-க்கு பல கோடிகள் கொடுக்கவும் தயாராக உள்ளதாகவும் தெரிகிறது.  இந்த அணிகளை வாங்குவதற்கான டெண்டரை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.

    அதில், புதிய ஐ.பி.எல். அணிகளை வாங்குவதற்கு ஏலத்தின் ஆரம்பத் தொகையாக ரூ. 2000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப தொகை ரூ.1700 கோடியாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2000 கோடி ரூபாயாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணிகளை ஏலம் விடுவதிலிருந்து ரூ.5000 கோடி வரை வருமானம் ஈட்ட பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாகவும், ஏலத்திற்காக ரூ. 10 லட்சத்தை டெபாசிட் பணமாக செலுத்த வேண்டும் என்றும் பி.சி.சி.ஐ .அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    மேலும், புதிய ஐ.பி.எல். அணியை வாங்க, சில நிபந்தனைகளும் உள்ளன. அவை ஆண்டுக்கு ரூ.3000 கோடி வரை வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே ஐ.பி.எல். அணியை வாங்க தகுதி பெற முடியும். புதிய அணிகள் அகமதாபாத், லக்னோ அல்லது புனேவை மையமாக கொண்டு உருவாக்கப்படலாம்.

    இதையடுத்து, ரூ.2000 கோடி அடிப்படை தொகை எனக்கூறப்பட்டு வரும் நிலையில் அணிகளை வாங்க பல முன்னணி நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகிறது. குறிப்பாக அதானி குழுமமும், ஆர்பிஎஜி குழுமமும் இரண்டுஅணிகளை வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பகிறது.

    தற்போது, இரண்டு புதிய அணிகள் வந்தால் போட்டிகளின் எண்ணிக்கை மொத்தமாக 94 ஆக உயரும். கிட்டத்தட்ட 3 மாத காலங்கள் போட்டிகள் நடத்தப்படும். எனவே போட்டிகளின் எண்ணிக்கையை 74 ஆக குறைத்து 60 நாட்களுக்குள் தொடரை நடத்தி முடிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×