search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள்
    X
    விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்கா வீரர்கள்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் - வெஸ்ட் இண்டீஸ் அணி 149 ரன்னில் சுருண்டது

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது.

    கிராஸ் ஐலெட்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது.

    இரு அணிகள் இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் போது தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 298 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.

    குயின்டன் டிகாக் 96 ரன்னும், கேப்டன் எல்கர் 77 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டிஸ் தரப்பில் கேமர்ரோச், கெய்ல் மேயர்ஸ் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை ஆடியது. தென் ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் அந்த அணி திணறியது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ஓவர்களில் 149 ரன்களில் சுருண்டது. இது தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோரை விட 149 ரன் குறைவாகும்.

    பிளாக்வுட் அதிகபட்சமாக 49 ரன்னும், ‌ஷகிஹோப் 43 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் முலாடர் 3 விக்கெட்டும், ரபடா, நிகிடி, கேசவ் மகராஜ் தலா 2 விக்கெட்டும், நோட்ஜே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    Next Story
    ×