search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோஸ் பவுல் ஸ்டேடியம்
    X
    ரோஸ் பவுல் ஸ்டேடியம்

    இந்திய அணி ஆடும் லெவனை மாற்ற வாய்ப்புள்ளதா? முடியுமா?

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால், டாஸ் சுண்டப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று சவுத்தம்டன் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் தொடங்குவதாக இருந்தது. நேற்றில் இருந்து திடீரென மழை பெய்து வருவதால் இன்றைய முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

    புதன்கிழமை வரை சவுத்தம்டனில் வானிலை நன்றாக இருந்தது. இதனால் இந்தியா நேற்று 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அணியை அறிவித்தது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்திருந்தனர்.

    முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், போட்டி நடைபெறும் ஐந்து நாட்களும் மழை பெய்யும் என வானிலை தெரிவித்துள்ளது.

    சவுத்தம்டனில் வறண்ட வானிலை நிலவினால் 4-வது மற்றும் 5-வது நாள் ஆட்டத்தின்போது சுழற்பந்து வீச்சு அதிக அளவில் எடுபடும். அதேவேளையில் ஸ்விங் மிகப்பெரிய அளவிற்கு இருக்காது.

    தற்போது ஐந்து நாட்கள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆடுகளம் ஸ்விங்கிற்கு அதிகமாக ஒத்துழைக்கும். இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று பேரும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஆனால், இவர்களால் பந்தை மிகச்சிறப்பான வகையில், குறிப்பாக புதுப்பந்தில் ஸ்விங் செய்ய இயலாது. அதே நேரத்தில் இளம் வீரரான முகமது சிராஜ் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்யக் கூடியவர்.

    இந்தியா ஆடும் லெவன் அணியை அறிவிப்பதற்கு முன் முகமது சிராஜ்-யை அணியில் சேர்க்க வேண்டும் என டுவிட்டரில் விவாதமே நடந்தது.

    இந்தியா ஏற்கனவே ஆடும் லெவனை அறிவித்த நிலையில், சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு, ஆடும் லெவனை மாற்றலாம். ஐந்து நாட்களும் மழை பெய்தால் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை வெளியில் வைத்து, நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க முயற்சி செய்யலாம். அல்லது இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, பும்ரா ஆகியோரில் ஒருவரை வெளியில் வைத்து முகமது சிராஜ்-யை ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படலாம்.

    இந்திய ஆடு்ம் லெவன் அணி

    ஆடும் லெவன் அணியை அறிவித்தபின் இந்திய அணியால் அதை மாற்ற முடியுமா? என்ற கேள்வியும் எழும்பலாம். ஆனால் டாஸ் போடுவதற்கு முன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடும் லெவன் அணியை நடுவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் ஆடும் லெவன் இறுதி செய்யப்படும். இதனால் இந்திய அணியை ஆடும் லெவன் அணியை மாற்ற வாய்ப்புள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஐசிசி-யின் விதிப்படி, இரண்டு அணி கேப்டன்களும் 11 பேர் கொண்ட ஆடும் லெவன், 4 மாற்று வீரர்கள் கொண்ட பட்டியலை ஐசிசி-யிடம் ஒப்படைக்க வேண்டும். மாறாக 1.2.7 மற்றும் 1.2.8. விதிப்படி ஆடும் லெலன் அணியில் இடம் பெறாத வீரர்களை இடம் பெற செய்ய முடியும். இதுகுறித்து எதிரணிக்கு தெரியவிக்க தேவையில்லை. டாஸ் சுண்டப்படும்போது போட்டிக்கான நடுவர் அல்லது இரு அணி கேப்டன்கள் வீரர்களின் பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம்.
    Next Story
    ×