search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோல் அடித்த ரஹீம் ஸ்டெர்லிங்
    X
    கோல் அடித்த ரஹீம் ஸ்டெர்லிங்

    யூரோ கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து

    ரஹீம் ஸ்டெர்லிங் 2-வது பாதி நேரத்தில் கோல் அடிக்க, குரோசியாவை 1-0 என வீழ்த்தி இங்கிலாந்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
    யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து- குரோசியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.

    முதல் பாதி நேரத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து முதல் கோலை பதிவு செய்தது. ரஹீம் ஸ்டெர்லிங் அந்த கோலை பதிவு செய்தார். அவர் கடைசியாக விளையாடிய 17 போட்டிகளில் 19 கோல்கள் அடிப்பதில் பங்கு வகித்துள்ளார். 13 கோல்கள் அடித்ததுடன், 6 கோல்கள் அடிப்பதற்கு உதவியாக இருந்துள்ளார்.

    அதன்பின் குரோசியாவால் பதில் கோல் அடிக்க முடியாததால் இங்கிலாந்து 1-0 என வெற்றி பெற்றது. யூரோ கோப்பை வரலாற்றில் இதற்கு முன் இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றதே கிடையாது. தற்போது அந்த மோசமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
    Next Story
    ×