search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பர்தீப் நர்வாலை மடக்கிப் பிடிக்கும் டெல்லி வீரர்கள்
    X
    பர்தீப் நர்வாலை மடக்கிப் பிடிக்கும் டெல்லி வீரர்கள்

    புரோ கபடி லீக்: பாட்னாவை வீழ்த்திய டெல்லி பட்டியலில் முதலிடம் பிடித்தது

    புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்சை 43 -39 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய தபாங் டெல்லி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.
    ஜெய்ப்பூர்:

    7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் இரு அணிகளும் தொடர்ந்து புள்ளிகளை எடுத்து வந்தன.

    முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் 13-13 என சமனிலை வகித்தன. இரண்டாம் பாதியிலும் பாட்னா அணி போராடியது.

    இறுதியில், தபாங் டெல்லி அணி 43-39 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    18-வது ஆட்டத்தில் ஆடிய தபாங் டெல்லி அணி பெற்ற 14-வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. 19-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா பைரேட்ஸ் அணி சந்தித்த 12-வது தோல்வி இதுவாகும்.
    Next Story
    ×