search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாக்கி இந்தியா
    X
    ஹாக்கி இந்தியா

    ஹாக்கி: பெல்ஜியத்தை 2-0 என வீழ்த்தியது இந்தியா

    மந்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பெல்ஜியம் அணிக்கெதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.
    இந்திய ஹாக்கி அணி பெல்ஜியம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி இன்று நடைபெற்றது.

    முதல் ஆட்டத்திலேயே உலக சாம்பியன்ஷிப்பான பெல்ஜியத்திற்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    39-வது நிமிடத்தில் மந்தீப் சிங் முதல் கோலை பதிவு செய்தார். 54-வது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் மற்றொரு கோல் அடிக்க இந்தியா 2-0 என வெற்றி பெற்றது.
    Next Story
    ×