search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரி கிர்ஸ்டன்
    X
    கேரி கிர்ஸ்டன்

    கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமிக்க இங்கிலாந்து பரிசீலனை

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டனை நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் போர்டு பரிசீலித்து வருகிறது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் பெய்லிஸ். இவரது பதவிக்காலம் நடந்து முடிந்த ஆஷஸ் தொடருடன் முடிவடைந்தது. புது பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு இறங்கியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக விளங்கிய கேரி கிர்ஸ்டன், ஒருநாள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டிற்கும் ஒவ்வொரு பணியாற்சியாளர்கள் வைத்துக் கொண்டால், அவர்களுக்குள் பிரச்சனை உண்டாகும் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு நினைக்கிறது.

    இதனால் கேரி கிர்ஸ்டனை மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் தலைமை பயிற்சியாளராக நியமிக்க இங்கிலாந்து ஆர்வம் காட்டுகிறது. இதை கேரி கிர்ஸ்டன் ஏற்றுக் கொள்ளுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

    கேரி கிர்ஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும்போது, இந்திய அணி 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. டெஸ்ட் போட்டியிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. அதேபோல் தென்ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, அந்த அணி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×