search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பும்ரா சேட்டன் சர்மா
    X
    பும்ரா சேட்டன் சர்மா

    பும்ரா திறமையை வீணடிக்கக் கூடாது: சேட்டன் சர்மா

    இந்திய ஆடுகளத்தில் பும்ராவை விளையாட வைத்து, அவரது திறமையை வீணடிக்கக் கூடாது என்று சேட்டன் சர்மா தெரிவித்துள்ளார்.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. அதன்பின் வங்காளதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்த இரண்டு தொடர்களும் ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்குள் வருகிறது. இதில் வெற்றி பெற்றால்தான் முன்னிலை வகிக்க முடியும். இதற்காக இந்தியா வலுவான அணியுடன் களம் இறங்குகிறது. பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்படும்.

    குறிப்பாக பும்ராவின் பளுவை கருத்தில் கொண்டு அவருக்கு போதுமான ஓய்வு கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்திய ஆடுகளத்தில் விளையாட வைத்து பும்ராவின் திறமையை வீணடிக்கக்கூடாது என சேட்டன் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

    பும்ரா குறித்து சேட்டன் சர்மா கூறுகையில் ‘‘இந்தியாவில் நடைபெறும் டெஸ்டில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்க வேண்டும். நாம் அவரைப் போன்ற சிறந்த வீரர்களின் திறமையை வீணடிக்கக்கூடாது. அவர் ஏன் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக உள்ளார் என்பதற்கு காரணம் உள்ளது. ஆனால், அவரை இதுபோன்ற சூழ்நிலையில் நாம் பரிசோதிக்கக் கூடாது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் திட்டத்தின் பும்ரா மிகவும் முக்கியமானவர். பும்ராவால் இந்தியா ஆடுகளத்திலும் விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியும் என்பது உலகிற்கு நாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.  இறுதியில் அணி வெற்றி பெற்று புள்ளிகள் பெறுவது அவசியம்’’ என்றார்.
    Next Story
    ×