search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்
    X
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்

    பிரிமீயர் லீக்: மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என வீழ்த்தியது வெஸ்ட் ஹாம்

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 2-0 என வீழ்த்தியது வெஸ்ட் ஹாம்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் புகழ்பெற்ற அணியான மான்செஸ்டர் யுனைடெட் வெஸ்ட் ஹாம் அணியை எதிர்கொண்டது.

    லண்டனில் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெஸ்ட் ஹாம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதி நேரம் முடிவதற்கு முந்தைய நிமிடத்தில் வெஸ்ட் ஹாம் அணியின் அண்ட்ரிய் ஹோர்மோலென்கோ கோல் அடித்தார். இதனால் வெஸ்ட் ஹாம் முதல் பாதி நேர ஆட்டத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் நீண்ட நேரமாக இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் 84-வது நிமிடத்தில் வெஸ்ட் ஹாம் அணியின் ஆரோன் கிரேஸ்வெல் ஒரு கோல் அடிக்க வெஸ்ட் ஹாம் 2-0 என மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.

    இங்கிலீஷ் பிரிமீயர் லீக்

    இந்தத் தோல்வியின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் புள்ளிகள் பட்டியலில் தலா இரண்டு வெற்றி, தோல்வி, டிரா மூலம் 8-வது இடத்தில் உள்ளது. வெஸ்ட் ஹாம் அணி 3 வெற்றி, இரண்டு டிரா, ஒரு தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    மற்ற ஆட்டங்களில் லிவர்பூல் 2-1 என செல்சியையும், அர்செனல் 3-2 என அஸ்டோன் வில்லாவையும் வீழ்த்தியது. கிரிஸ்டோல் பேலேஸ் - வோல்வ்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
    Next Story
    ×