search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஜ்ரங் புனியா
    X
    பஜ்ரங் புனியா

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா மங்கோலிய வீரரை 8-7 என வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றார்.
    கஜகஸ்தானில் உள்ள நுர்-சுல்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 65 கிலோ எடைபிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் மங்கோலியாவைச் சேர்ந்த கிராப்லெரை எதிர்கொண்டார்.

    பஜ்ரங் புனியா ஒரு கட்டத்தில் 0-6 என பின் தங்கியிருந்தார். அதன்பின் சிறப்பாக சண்டையிட்டு 8-7 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

    கடந்த ஆண்டு வெள்ளிப்பதக்கமும், 2013-ல் வெண்கல பதக்கமும் வென்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மூன்று பதக்கங்கள் வென்றுள்ளார்.
    Next Story
    ×