search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குல்தீப் யாதவ்
    X
    குல்தீப் யாதவ்

    டி20 அணியில் இருந்து நீக்கியதால் கவலைப்படவில்லை: குல்தீப் யாதவ்

    மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் தயாராகி வந்த நிலையில், டி20 அணியில் இருந்து நீக்கியதால் கவலைப்படவில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
    இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த குல்தீப் யாதவ், தனது சிறந்த பந்து வீச்சால் டி20 அணியில் நட்சத்திர பந்து வீச்சாளரானார். சாஹல் உடன் இணைந்து ஜடேஜா மற்றும் அஸ்வினை பின்னுக்குத் தள்ளினார்.

    இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இருவரும்தான் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக இருந்தனர். உலகக்கோப்பைக்குப்பின் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 தொடரின்போது திடீரென இருவரும் நீக்கப்பட்டனர்.

    தற்போது நடைபெற்று வரும் தென்அப்பிரிக்கா தொடரிலும் இடம் கிடைக்கவில்லை. மற்ற அணிகளில் 9-வது பேட்ஸ்மேன் வரை பேட்டிங் செய்யும்போது, நாமும் அதுபோன்று ஏன் அணியை மாற்றம் செய்யக்கூடாது என்று அடுத்த வருடம் வரும் டி29 உலகக்கோப்பையை நினைவில் வைத்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

    குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டதற்கான காரணம்தான் அது எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டது கவலையளிக்கவில்லை என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘இதுவரை நான் குறுகிய கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ஒருநாள்) சிறப்பாகவே செயல்பட்டுள்ளேன்.

    ஒயிட்-பந்து எனக்கு மிகவும் வசதியாகவே இருந்ததாக கருதினேன். கடந்த இரண்டு டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து நான் கவலைப்படவில்லை.

    ஒருவேளை எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்று தேர்வுக்குழு நினைத்திருக்கலாம். அணி சில மாற்றங்கள் தேவை என்றுகூட நினைத்திருக்கலாம். நான் அதற்கு மதிப்பு அளிக்கிறேன். நான் இதுகுறித்து புகார் தெரிவிக்கவில்லை. இது டெஸ்ட் போட்டியில் நான் சிறப்பாக விளையாட கிடைத்த வாய்ப்பு என்று பார்க்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×