search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிவி சிந்து
    X
    பிவி சிந்து

    சீனா ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து 2-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிவி சிந்து சீன ஓபன் பேட்மிண்டனில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
    சீனா ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து 2-வது சுற்றில் தாய்லாந்தை சேர்ந்த சோச்சுவாங்கை எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 21-12, 13-21, 19-21 என தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    முதல் சுற்றில் பிவி சிந்து 3-0, 7-1 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் தாய்லாந்து வீராங்கனை இடைவெளியை 10-11 எனக் குறைத்தார். பிவி சிந்து தொடர்ச்சியாக 8 புள்ளிகள் பெற்று இறுதியில் 21-12 என முதல் செட்டை கைப்பற்றினார்.

    2-வது செட்டில் தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங் சிறப்பாக விளையாடினார். 5-1 என முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், பிவி சிந்து 7-9 என நெருக்கடி கொடுத்தார். அதன்பின் சோச்சுவாங் 15-7 என முன்னிலைப் பெற்று 2-வது செட்டை 21-13 எனக் கைப்பற்றினார்.

    வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 6-6 என இருவரும் சமநிலையில் இருந்த நிலையில், பிவி சிந்து 11-7 என முன்னிலைப் பெற்றிருந்தார். ஒரு கட்டத்தில் பிவி சிந்து 19-15 என முன்னிலைப் பெற்றிருந்தார். ஆனால் சோச்சுவாங் தொடர்ந்து 6 புள்ளிகள் பெற்று 21-19 என 3-வது செட்டை கைப்பற்றி பிவி சிந்துவை வெளியேற்றினார்.
    Next Story
    ×