search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி - குர்ணால் பாண்டியா
    X
    விராட் கோலி - குர்ணால் பாண்டியா

    2-வது 20 ஓவர் போட்டி: இந்தியா-தென்ஆப்பிரிக்கா நாளை பலப்பரீட்சை

    இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிக்களுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது.
    மொகாலி:

    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகளும் மூன்று 20 ஓவர் போட்டி, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன.

    கடந்த 15-ந்தேதி தர்மசாலாவில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா மோத இருந்த முதலாவது 20 ஓவர் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    இரு அணிகள் மோதும் இரண்டாவது 20 ஓவர் போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித்சர்மா, ஷிகர்தவான், லோகேஷ் ராகுல், ரி‌ஷப்பந்த், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்டியா போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

    பந்து வீச்சில் கலீல் அகமது, ராகுல் சாகர், குர்ணால் பாண்டியா, ஜடேஜா, தீபக் சாகர், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனர்.

    அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை தயார் செய்யும் விதமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளன.

    மிடில் ஆர்டர் வரிசையில் மனிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவர். இந்த வாய்ப்பை இளம் வீரர்கள் பயன்படுத்தி கொள்வது அவசியம்.

    பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் இந்தியா உள்ளதால் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குயின்டான் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியில் ரீஜா ஹென்ரிக்ஸ், பவுமா, வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர் ஆகிய பேட்ஸ்மேன்களும் ஆல்-ரவுண்டர்கள் பெலுக்வாயோ, வெய்ன் பிரிட்டோரியஸ் ஆகியோரும் உள்ளனர்.

    பந்து வீச்சில் ரபரா, ஜூனியர் டலா, தப்ரைஸ் ‌ஷம்சி, நார்ஜே, போர்ச்சுன், பெயூரன் ஹென்ரிக்ஸ் ஆகியோர் உள்ளனர். முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் தென் ஆப்பிரிக்க அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு குயின்டான் டி காக்குக்கு கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    இரு அணிகளிலும் இளம் வீரர்கள் இடம் பெற்று உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    Next Story
    ×