search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்குலி
    X
    கங்குலி

    அவருடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது - கங்குலி

    விராட் கோலி தான் உலகின் சிறந்த வீரர் எனவும் மத்த வீரருடன் அவரை ஒப்பிடக்கூடாது எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்ட டெஸ்ட் வீரர்களின் தர வரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட்கோலி (9-3 புள்ளி) உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான ஆ‌ஷஸ் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு ஸ்டீவன் சுமித் தர வரிசையில் 4-வது இடத்தில் (857 புள்ளி) இருந்தார். அவர் ஆ‌ஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்ததன் மூலம் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில் விராட் கோலிதான் தற்போது உலகின் சிறந்த வீரர் என்று இந்திய முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட்கோலியையும், ஸ்டீவன் சுமித்தையும் ஒப்பிட்டு பார்க்க நான் விரும்பவில்லை. தற்போதும் விராட்கோலிதான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்.

    ஸ்மித் - விராட் கோலி


    ஆனால் ஸ்டீவன் சுமித்தின் சாதனைகள் அவரை பற்றி சொல்லும். அவர் 26 டெஸ்ட் சதம் அடித்து இருக்கிறார். இது தனி சிறப்பு வாய்ந்தது.

    டோனியின் எதிர்காலம் பற்றி தேர்வுக்குழுவும், கேப்டன் விராட்கோலியும் என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. அவர்கள் முக்கியமான நபர்கள். அவர்களை முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும்.

    இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினமானது. அதுதான் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×