என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக் - டெல்லி அணி 13-வது வெற்றி
Byமாலை மலர்17 Sep 2019 5:24 AM GMT (Updated: 17 Sep 2019 5:24 AM GMT)
தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
புனே:
12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புனேவில் நேற்று இரவு நடந்த 93-வது லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-உ.பி.யோத்தா அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கம் முதலே முன்னிலை வகித்த உ.பி.யோத்தா அணி ஆட்ட நேரம் முடிவில் 38-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது. 15-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 8-வது வெற்றி இது. 16-வது ஆட்டத்தில் ஆடிய ஜெய்ப்பூர் அணி சந்தித்த 8-வது தோல்வி இதுவாகும். இதனை அடுத்து நடந்த லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 37-29 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை சாய்த்தது. 16-வது ஆட்டத்தில் ஆடிய தபாங் டெல்லி அணி 13-வது வெற்றியுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 15-வது ஆட்டத்தில் ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் அணி சந்தித்த 9-வது தோல்வி இதுவாகும்.
இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் மும்பை-உ.பி.யோத்தா (இரவு 7.30 மணி), புனேரி பால்டன்-தமிழ் தலைவாஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story
×