search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிம் பெய்ன்
    X
    டிம் பெய்ன்

    டிஆர்எஸ் என்றாலே விரும்பத்தகாக நிகழ்வாக உள்ளது: டிம் பெய்ன் வேதனை

    டிஆர்எஸ் முறையை சரியாக பயன்படுத்த தவறிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன், அதை நினைத்தாலே விரும்பத்தகாத நிகழ்வாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் டிம் பெய்யின் அவறான முடிவுதான்.

    டிம் பெய்ன் தேவையில்லாமல் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தி அதை வீணடிக்க, முக்கியமான கட்டத்தில் நாதன் லயன் வீசிய பந்து பென் ஸ்டோக்ஸின் காலில் படும்போது எல்பிடபிள்யூ அப்பீல் கேட்டனர்.

    பந்து ஸ்டம்பை தாக்குவதுபோல் இருந்தாலும் நடுவர் அவுட் கொடுக்க வில்லை. அம்பயர் முடிவை எதிர்த்து கேட்க டிஆர்எஸ் வாய்ப்பு இல்லாததால் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியது.

    ஓவலில் நடைபெற்று வரும் கடைசி போட்டியின் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது டிஆர்எஸ் முறையை சரியாக பயன்படுத்தாததல் ஆஸ்திரேலியா தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

    2-வது இன்னிங்சில் இங்கிலாந்து பேட்ஸ்டேன் ஜோ டென்லி 54 ரன்கள் எடுத்திருக்கும்போது மிட்செல் மார்ஷ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நடுவர் அவுட் கொடுக்கவில்லை. மிட்செல் மார்ஷ் டிஆர்எஸ் கேட்கலாம் என்றார். ஆனால் டிம் பெய்ன் டிஆர்எஸ் கேட்கவில்லை. இதனால் அவுட்டில் இருந்து தப்பித்த டென்லி 94 ரன்கள் சேர்த்தார்.

    ஜோஸ் பட்லர் 19 ரன்கள் எடுத்த நிலையில் நாதன் லயன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். நாதன் லயன் ரிவியூ கேட்க விரும்பினாலும் கேப்டனான டிம் பெய்ன் விரும்பவில்லை. பின்னர் ரீ-பிளேயில் அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. அவுட்டில் இருந்து தப்பிய பட்லர் 47 ரன்கள் அடித்துவிட்டார். இதனால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 300 ரன்களுக்கு மேல் குவிரத்துவிட்டது.

    3-வது நாள் ஆட்டம் முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த டிம் பெய்ன், டிஆர்எஸ் என்றாலே விரும்பத்தகாத நிகழ்வாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    டிம் பெய்ன்

    இதுகுறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘நான் டிஆர்எஸ் வாய்ப்பை தவறாக கையாண்டு விட்டேன். இதைப்பற்றி எப்படி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அதை நினைத்தாலே எங்களுக்கு விரும்பத்தகாக நிழ்வாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நாங்கள் தவறு செய்து விட்டோம்.

    இதற்கு முன்பே, டெஸ்ட் போட்டிகளில் நடுவர்கள் வேலை மிகவும் கடினமானது என்று தெரிவித்துள்ளேன். கடினமான வேலையை செய்யும் நடுவர்கள் மீது தனக்க தற்போது புதிய மரியதை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
    Next Story
    ×