search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்சர் அவுட்டாகி வெளியேறும் காட்சி
    X
    ஆர்சர் அவுட்டாகி வெளியேறும் காட்சி

    லண்டன் ஓவல் டெஸ்ட்: ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்கு

    லண்டன் ஓவலில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பட்லர் (70), ஜோ ரூட் (57) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியில் சார்பில் மிட்செல் மார்ஷ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆர்சரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. ஸ்மித் 80 ரன்களும், மார்னஸ் லாபஸ்சாக்னே 48 ரன்களும் சேர்க்க ஆஸ்திரேலியா 225 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. ஆர்சர் 6 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 69 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. டென்லி (94), பட்லர் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்திருந்தது. ஆர்சர் 3 ரன்னுடனும், லீச் 5 ரன்னுடனும்  களத்தில் இருந்தனர்.

    பாய்ந்து கேட்ச் பிடிக்கும் லாபஸ்சாக்னே

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆர்சர் நேற்று எடுத்திருந்த 3 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். லீச் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 69 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஒட்டு மொத்தமாக 398 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

    இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் ஆஷஸ் தொடரை கைப்பற்றும். மாறாக தோல்வியடைந்தால் தொடர் சமனில் முடியும்.
    Next Story
    ×