search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாஹல் குல்தீப் யாதவ்
    X
    சாஹல் குல்தீப் யாதவ்

    20 ஓவர் போட்டியில் குல்தீப், சாஹல் நீக்கப்பட்டது ஏன்?: கேப்டன் கோலி விளக்கம்

    டி20 கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன? என்பதை விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மழை அச்சுறுத்தல் காரணமாக போட்டி பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. விராட் கோலி அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீ சில் பயணம் மேற்கொண்டு 20 ஓவர், ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.

    அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா அணியும் எல்லா வகையிலும் சவாலாக விளங்கும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.

    இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

    சுழற்பந்து வீரர்களான குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் ஆகியோர் 20 ஓவர் தொடரில் சேர்க்கப்படாததற்கு அவர்களது பேட்டிங் செயல்பாடுதான் காரணம். இதனால்தான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு தரப்பட்டது.

    சம விகிதத்தில் அணி அமைய வேண்டும் என்று கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து நாடுகளிலும் 9 மற்றும் 10-வது வரிசை வீரர்கள் வரை பேட்டிங் செய்யும்போது நாமும் அவ்வாறு ஏன்? ஆடக்கூடாது.

    ஒருநாள் போட்டிக்கான அணியில் அஸ்வின், ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல் சேர்க்கப்பட்டபோது பலர் விமர்சித்தனர். எந்த முடிவு எடுத்தாலும் பலமான சரியான அணி அமைய வேண்டும் என்பதே நோக்கமாகும்.

    அடுத்து வர இருக்கும் 20 ஓவர் உலககோப்பை ஒரு மைல்கல் போன்றதாகும். ஒவ்வொரு அணியும் அதற்காக தீவிரமாக தயாராவார்கள். அதேபோல நாமும் சிறந்த அணியை உருவாக்குவோம்.

    இதுபோன்ற தொடர்களில் தொடக்க வீரர்களையும் சோதித்து பார்க்க முடியும். அவர்களது ஆடும் திறன், தகுதி, சர்வதேச அளவில் போட்டி மனப்பான்மை போன்றவை ஆய்வு செய்யப்படும். புதுமுகங்களுடன் ஆடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    டோனி இந்திய கிரிக்கெட் மீது அக்கறை கொண்டவர். ரி‌ஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களை உருவாக்கினாலும் 38 வயதான டோனி எப்போதும் விலை மதிப்பற்றவர்.

    குல்தீப் யாதவ், சாஹல்

    அவரது ஓய்வு விவகாரம் தற்போதைக்கு முற்றுப் பெறாதது. விமர்சனங்களுக்கு டோனி தனது ஆட்டம் மூலம் சரியான பதிலடி கொடுப்பவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    விளையாட்டில் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கும். பலமுறை டோனி இதை மைதானத்தில் நிரூபித்து இருக்கிறார். அவர் தொடர்ந்து ஆடும் பட்சத்தில் அணிக்கு விலை மதிப்பற்றவர். ஓய்வு முடிவு தனிப்பட்ட வி‌ஷயமாகும்.

    இவ்வாறு கோலி கூறியுள்ளார்.
    Next Story
    ×