search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    94 ரன்னில் அவுட்டான ஜோ டென்லி
    X
    94 ரன்னில் அவுட்டான ஜோ டென்லி

    ஓவல் டெஸ்ட்: ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ் பொறுப்பான ஆட்டத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து

    ஓவலில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
    லண்டன்:

    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலியா 225 ரன்களும் எடுத்தன.

    69 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்திருந்தது.

    இந்நிலையில் நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். ரோரி பர்ன்ஸ் 20 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 21 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

    இதையடுத்து, தொடக்க வீரர் ஜோ டென்லியுடன், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அமைத்தார். இருவரும் அணியின் ஸ்கோரை வலுவான நிலையை உயர்த்தினர்.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் நாதன் லயன்

    அணியின் எண்ணிக்கை 214 ரன்களாக உயர்ந்தபோது பென் ஸ்டோக்ஸ் 67 ரன்களில் அவுட்டானார்.

    மறுமுனையில், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ டென்லி 94 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 47 ரன்னில் வெளியேறினர்.

    மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 313 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி இதுவரை 382 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
    Next Story
    ×