search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    80 ரன்கள் அடித்த சிம்மன்ஸ்
    X
    80 ரன்கள் அடித்த சிம்மன்ஸ்

    கரீபியன் லீக் தொடரில் அதிக ரன்கள் குவித்து அசத்தியது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி

    கரீபியன் பிரிமீயர் லீக் தொடரில் நேற்று நடந்த ஜமைக்கா தலைவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் 267 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை பெற்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.
    ஜமைக்கா:

    வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த போட்டியில் ஜமைக்கா தலைவாஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    இதில், டாஸ் வென்ற ஜமைக்கா தலைவாஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, டிரின்பாகோ அணி களமிறங்கியது.

    அந்த அணியின் சுனில் நரேன் 20 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் லெண்டி சிம்மன்ஸ் 42 பந்தில் 5 சிக்சர், 8 பவுண்டரியுடன் 80 ரன்கள் அடித்து அவுட்டானார்.   

    அடுத்து இறங்கிய காலின் முன்ரோவும், பொல்லார்டு இருவரும் அதிரடி ஆட்டம் ஆடினர். இறுதியில், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது. முன்ரோ 50 பந்துகளில் 8 சிக்சர், 6 பவுண்டரியுடன் 90 ரன்களும், பொல்லார்டு 17 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரியுடன் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    90 ரன்கள் அடித்த முன்ரோ

    இதன்மூலம் கரீபியன் லீக் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை பெற்றது டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி. 

    இதையடுத்து, 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா அணி களமிறங்கியது. அந்த அணியில் கிளென் பிலிப்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் 32 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கிறிஸ் கெயில் 39 ரன்னிலும், ஜாவெல் கிளென் 34 ரன்னிலும் ராமல் லெவிஸ் 37 ரன்களும் எடுத்தனர்.

    இறுதியில், ஜமைக்கா தலைவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ரன்கள் மட்டுமே எடுத்து 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
    Next Story
    ×