search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ ரூட்
    X
    ஜோ ரூட்

    கேப்டன் பதவியால் தனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை: ஜோ ரூட்

    கேப்டன் பதவியால் தனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோ ரூட் கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவரது டெஸ்ட் போட்டியின் பேட்டிங் சராசரி 52.80 ஆக இருந்தது. தற்போது 40.90-வாக சரிந்துள்ளது.

    குறிப்பாக இந்த ஆஷஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஸ்மித் 134.20 சராசரி வைத்துள்ள நிலையில், ஜோ ரூட்டின் சராசரி 30.87-தான். மேலும், நான்கு போட்டிகளில் மூன்று முறை டக்அவுட் ஆகியுள்ளார்.

    இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஜோ ரூட்டின் பேட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழும்பியுள்ளது. இதை ஜோ ரூட் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
    Next Story
    ×