search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்எஸ் டோனி விராட் கோலி
    X
    எம்எஸ் டோனி விராட் கோலி

    எம்எஸ் டோனியின் ஓய்வை சூசகமாக அறிவித்தாரா விராட் கோலி?

    எம்எஸ் டோனியுடன் விளையாடிய முக்கியமான ஆட்டத்தை விராட் கோலி ‘ஸ்பெஷல் நைட்’ என டுவிட்டரில் நினைவு கூர்ந்ததால், ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய எம்எஸ் டோனி எப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதே விமர்சகர்களின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது. ஆனால், ரசிகர்கள் அவர் ஓய்வு பெறாமல் தொடர்ந்து விளையாட வேண்டும் என விரும்புகின்றனர்.

    உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தபோது கடும் விமர்சனத்திற்குள்ளானார் தல டோனி.

    அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவத்தில் பயிற்சி பெற செல்கிறேன். இரண்டு மாதங்கள் விடுமுறை வேண்டும் எனக் கூறி வெளியேறினார்.

    அதனைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் தென்ஆப்பிரிக்கா தொடரில் எம்எஸ் டோனி பெயர் குறித்து பரிசீலிக்கவில்லை.

    எம்எஸ் டோனி விராட் கோலி

    இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2016-ல் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் விராட் கோலியும், டோனியும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர்.

    அந்த போட்டியை நினைவு கூர்ந்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட். டோனி என்னை பிட்னஸ் டெஸ்ட் போன்று ஓடவைத்தார்’’ என பதிவிட்டுள்ளார்.

    எம்எஸ் டோனி விராட் கோலி

    எம்எஸ் டோனியுடனான முக்கியமா நிகழ்வை விராட் கோலி தெரிவித்திருப்பதால், டோனி ஓய்வை முடிவை எடுத்திருக்கலாம் என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளன.
    Next Story
    ×