search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குயின்டன் டி காக்
    X
    குயின்டன் டி காக்

    டி20 உலகக்கோப்பை தொடருக்கு டி காக்-ஐ கேப்டனாக நியமிக்க விரும்பும் தென்ஆப்பிரிக்கா

    குயின்டன் டி காக் தலைமையில் டி20 உலகக்கோப்பையை சந்திக்க தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு விரும்புகிறது.
    இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணியில் பல மாற்றம் செய்து புத்துணர்ச்சியை ஏற்படுத்த தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    முதற்கட்டமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் டி20 அணியின் கேப்டனாக குயின்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார். டு பிளிசிஸ்க்கு 35 வயதாகிறது. டி காக்கிற்கு 26 வயதுதான் ஆகிறது. கடந்த 2012-ல் இருந்து ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். இதனால் அவருக்கு போதுமான அனுபவம் உள்ளது.

    ஆகவே, ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பையை டி காக் தலைமையில் சந்திக்க தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டு விரும்புகிறது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் டி காக் சிறப்பாக செயல்பட்டால் தொடர்ந்து கேப்டனாக செயல்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது.
    Next Story
    ×