search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீம் இந்தியா
    X
    டீம் இந்தியா

    இந்தியா 2 வெற்றி- 120 புள்ளிகள்: ஆஸ்திரேலியா 2 வெற்றி, ஒரு டிரா- ஆனால் 56 புள்ளிகள்தான்: எப்படி சாத்தியம்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளிகள் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை தெளிவாக காண்போம்.
    டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் படுத்தியது. 2019 முதல் 2021 வரை நடக்கும் தொடர்கள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

    முதன்முறையாக ஆஷஸ் தொடர் ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அறிமுகம் படுத்தியது. அதன்பின் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ், இலங்கை - நியூசிலாந்து அணிகள் மோதின.

    ஆஸ்திரேலியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. இந்தியா இரண்டு பேட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை, நியூசிலாந்து தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து ஒரு போட்டியை டிரா செய்துள்ளது.

    ஆனால் இந்தியாவுக்கு மட்டும் 120 புள்ளிகளும், ஆஸ்திரேலியாவுக்கு 56 புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு குழப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், புள்ளிகள் பட்டியல் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஐசிசி இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்குத்தான் 120 புள்ளிகள் என்று கணக்கிட்டுள்ளது.

    அதன்படி இரண்டு போட்டிகளில் கொண்ட தொடரில் ஒரு வெற்றிக்கு 60 புள்ளிகள், டை-க்கு 30 புள்ளிகள், டிராவுக்கு 20 புள்ளிகள் என வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு 120 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    மூன்று போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் வெற்றிக்கு 40 புள்ளிகளும், டை-க்கு 20 புள்ளிகளும், டிராவுக்கு 13 புள்ளிகளும் வழங்கப்படும்.

    நான்கு போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் வெற்றிக்கு 30 புள்ளிகளும், டை-க்கு 15 புள்ளிகளும், டிராவுக்கு 10 புள்ளிகளும் வழங்கப்படும்.

    ஐந்து போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் வெற்றிக்கு 24 புள்ளிகளும், டை-க்கு 12 புள்ளிகளும், டிராவுக்கு 8 புள்ளிகளும் வழங்கப்படும்.

    அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு (48+8) 56 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×