search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷித் கான்
    X
    ரஷித் கான்

    டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான்

    இளம் வயதில் கேப்டனாக பதவி ஏற்ற ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் சிறப்புமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
    வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சட்டோகிராமில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

    ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் செயல்பட்டார். இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரஷித் கான் சிறப்புமிக்க வரலாற்று சாதனைகளை படைத்துள்ளார்.

    1. டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் கேப்டன் பொறுப்பை ஏற்ற வீரர் என்ற சாதனைப் படைத்த ரஷித் கான், அறிமுக போட்டியிலேயே வெற்றி பெற்ற கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    2. கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் அடித்ததுடன் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றி முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    3. ஆட்ட நாயகன் விருதையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

    4. டெஸ்ட் போட்டிகள் விளையாடும் 10 நாட்டிற்கு எதிராக தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை வங்காளதேசம் பதிவு செய்துள்ளது.
    Next Story
    ×