search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றி மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்
    X
    வெற்றி மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

    வங்காளதேசத்தை 224 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

    வங்காளதேசம் அணிக்கெதிரான் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    சட்டோகிராம்:

    வங்காளதேசம்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வங்காளதேசத்தில் உள்ள சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது.

    ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 342 ரன் குவித்தது. வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது.

    137 ரன்கள் முன்னிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் 260 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் வங்காளதேச அணிக்கு 398 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் நேற்றைய 4-வது நாள் ஆட்டம் நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து திணறிய நிலையில் இருந்தது.

    வங்காளதேச வெற்றிக்கு மேலும் 262 ரன் தேவை. கைவசம் 4 விக்கெட் இருந்தது. வங்காளதேச அணியின் 4 விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற நிலை ஆப்கானிஸ்தானுக்கு இருந்தது. இன்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில் மழை நின்றதையடுத்து ஆட்டம் தொடங்கியது. சவுமியா சங்கர் மற்றும் சகிப் அல்ஹசன் நிதானமாக விளையாடினர். 46.3 ஓவர் வீசிய நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு மீண்டும் வங்களாதேசம் அணி களமிறங்கினர். இடைவெளிக்கு பிறகு ஜாகீர் கான் வீசிய (46.4) முதல் பந்திலேயே சகிப் அல்ஹசன் (44) வெளியேறினார்.

    அடுத்து வந்த வீரகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். கடைசி விக்கெட்டுக்கு சவுமியா சங்கர் உடன் ஜோடி சேர்ந்த ஹசன் பொறுப்புடன் விளையாடினார். 61.4 ஓவரில் ரஷித்கான் பந்து வீச்சில் சவுமியா சங்கர் அவுட் ஆனார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித்கான் 6 விக்கெட்டும், ஜாகீர் கான் 3 விக்கெட்டும், நபி 1 விக்கெட்டும் விழ்த்தினர். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்திய ரஷித் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
    Next Story
    ×