search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் வீரர்கள்
    X
    ஆப்கானிஸ்தான் வீரர்கள்

    வெற்றியின் விளிம்பில் ஆப்கானிஸ்தான்: 136 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து வங்காள தேசம் திணறல்

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், வங்காள தேசம் 136 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்துள்ளது.
    வங்காள தேசம்- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 5-ந்தேதி சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 342 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய வங்காள தேசம் 205 ரன்னில் சுருண்டது.

    137 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 260 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    ஒட்டுமொத்தமாக 397 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்.

    398 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேச விரைவாக விக்கெட்டுக்களை இழந்தது. வங்காள தேசம் 44.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.

    ஆப்கானிஸ்தான் வீரர்கள்

    தற்போது வரை வங்காள தேசம் 262 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 4 விக்கெட்டுக்கள் மட்டுமே உள்ளன. ஷாகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், சவுமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

    நாளை ஒருநாள் முழுவதும் உள்ளது. இந்த ஜோடியை பிரித்துவிட்டால், ஆப்கானிஸ்தான் எளிதாக வெற்றி பெற்றுவிடும்.
    Next Story
    ×