search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துலீப் டிராபி
    X
    துலீப் டிராபி

    இந்தியா க்ரீன் அணியை வீழ்த்தி துலிப் டிராபியை வென்றது இந்தியா ரெட்

    பெங்களூருவில் நடைபெற்ற துலீப் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா க்ரீன் அணியை இன்னிங்ஸ் கணக்கில் வீழ்த்தி இந்தியா ரெட் சாம்பியன் பட்டம் வென்றது.
    இந்தியா ரெட், இந்தியா க்ரீன், இந்தியா ப்ளூ அணிகளுக்கு இடையிலான துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா க்ரீன் - இந்தியா ரெட் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    இறுதிப் போட்டி செப்டம்பர் 4-ந்தேதி முதல் நேற்று வரை நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா க்ரீன் 231 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ரெட் தொடக்க வீரர் ஈஸ்வரன் (153) சதத்தால் 388 ரன்கள் குவித்தது.

    பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா க்ரீன் 2-வது இன்னிங்சில் விளையாடியது. வகாரே ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்த க்ரீன் அணி 119 ரன்னில் சுருண்டது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ரெட் வெற்றி பெற்று துலீப் டிராபி சாம்பியன் பட்டத்தை வென்றது.
    Next Story
    ×